Friday, March 27, 2009

Just Like Heaven -திரைவிமர்சனம்


சில நாட்களுக்கு முன்பு நான் கண்டு மிகவும் admire பண்ணிய படம்.....

Reese Witherspoon and Mark ruffalo நடித்த படம் ....

கதை ஒரு தெளிந்த நீரோடை போன்று, அங்கங்கே சில சுவாரஸ்யங்கள் என்று மொத்தத்தில் ஒரு neat ஆன படம்....

கதை:
ஒரு மருத்துவமனையில் தொடங்குகிறது....அங்கு வேலை செய்யும் டாக்டர் எலிசபெத் ஒரு நாற்காலியில் அமர்ந்து கனவில் இருக்கிறார்,அதில் அவர் ஒரு அழகிய தோட்டம் ஒன்றில் அமர்ந்து இருப்பதை உணர்கிறார்..., ஓய்வு இன்றி பல மணி நேரங்கள் உயிர்களை காப்பாற்றவே செலவிடுகிறார்....தலைமை டாக்டர் இதை கவனித்து அவருக்கு பதவி உயர்வு கொடுத்து , நீ பிறர் போல் என் பின்னால் சுத்தாமல் வேலை செய்கிறாய் என்று சொல்லி விட்டு போகிறார்...(இதற்கு ஆங்கிலத்தில் அவர் உபயோகிக்கும் வார்த்தை censored ஹி ஹி ஹி )...

அவள் வேலை முடித்து காரில் வீட்டுக்கு திரும்ப யத்தனிக்கும் போது எதிரே ஒரு truck
வருவது போல் திரை freeze ஆகிறது...

அடுத்த காட்சியில் ஒரு apartment இல் வாழ்வில் லச்சியம் இல்லாமல் சோம்பேறி தனமாக இருக்கும் டேவிட் இடம் இருந்து ஆரம்பிக்கிறது....

பீர் அடித்து கொண்டு இருக்கும் போது எதிரே வரும் எலிசபெத் இவனை கண்டு திருடன் என்று நினைத்து கத்துகிறார்....ஒரு கட்டத்தில் இவனை பன்றி என்று சொல்லி விட்டு பக்கத்து அறையில் போக...அங்கே போகும் டேவிட் அவளை காணாது அதிர்ச்சி அடைகிறான்...
தொடரும் சம்பவங்களில் அவள் தனக்கு மட்டுமே தெரியும் ஒரு ஆவி என்று அறிகிறான்....அவளுடைய காண்ணாடி டேபிள் இல் ஈர பீர் பாட்டில் வைக்க காச் மூச் என கத்துகிறாள்...
அவளை அழைத்து பேசுவதற்கு ஸ்பிரிட் awake , அது இது என்று மந்திரம் சொல்ல அவள் வராது போகவே..ஒரு கப் ஈர பீரை அந்த டேபிள் மீது அவன் வைக்க போகும் போது அவள் வருவது ரசிக்க தகுந்த இடம்....
அவன் இருக்கும் அந்த apartment அவளுடையது என்பதையும் அறிகிறான்....
அந்த ஆவியை விரட்ட பல முயற்சிகளை மேற்கொள்கிறான், பாதர் , சைனீஸ் மாந்திரீகர்கள் மற்றும் ghost busters போன்று பலர் இதோ ஆவி போகிறது என்று ஜாலம் காமிக்க ஆனால் எலிசபெத்தோ அவன் அருகிலயே இருந்து கொண்டு எல்லாவற்றையும் பார்க்கிறாள்....

இந்த நிலையில் எலிசபெத்தும் அவனை பற்றி அறிந்து கொள்கிறாள்....அவன் மனைவியை இழந்தவன் என்று புரிந்து அவனிடம் மன்னிப்பு கேட்க ,அவன் மறப்பதற்கு தண்ணி அடிக்க போகும் போது இவள் கலாட்டா செய்து தடுக்கிறாள்....
தன்னை யார் என்று கண்டு பிடித்து தர கேட்கிறாள்...
இல்லை என்றால் நீ தனியாக பேசும் ஒரு முட்டாள் என்று பிறர் எண்ண வைத்து விடுவேன் என்று மிரட்ட....அவன் ஒவ்வொரு வீடாக இவளை பற்றி விசாரிக்க...சரியான பதில் கிடைக்காமல் திரும்புகிறான்...

ஒருவாறு ஒரு restaurant அருகே போகும் போது ஒருவன் அடிப்பட, இவளின் வார்த்தை படி அவனை டேவிட் காப்பாற்ற அவள் ஒரு டாக்டர் என்பதை அறிகிறார்கள்...
அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு போகும் அவள் அங்கு தான் தான் வேலை பார்த்ததை சொல்கிறாள்....அங்கு உள்ளவர்களிடம் அவளை விசாரிக்க....
இந்த நேரத்தில் எலிசபெத் இதயத்துடிப்பை உணர்கிறாள்....
மிதந்து சென்று ஒரு அறையில் திரும்ப அங்கே அவள் கோமாவில் பல மாதங்களாக இருப்பது தெரிகிறது....அங்கே அவளை விட்டு விட்டு டேவிட் திரும்புகிறான்...அவனையும் அறியாமல் அவள் மேல் இவனுக்கு ஒரு ஈர்ப்பு வருகிறது....
இந்த நிலையில் எலிசபெத்தின் அக்கா , அவளின் லைப் சப்போர்ட் ஐ எடுக்கும் முடிவுக்கு வருகிறாள்....

அதை தடுக்க முடியாமல் எலிசபெத் மீண்டும் டேவிட் இடம் போகிறாள்....

அவன் தான் தன்னுடைய நிறைவேறாத ஆசை அதான் நான் இப்படி ஆவியாக உன் கண்ணுக்கு மட்டும் தெரிகிறேன் என்று அவள் சொல்ல....
அவன் உன் ஆசையை சொல் எங்கே வேண்டுமானாலும் போகலாம் என்கிறான்...ஆனால் அவன் அருகே ஒரு இரவை கழிக்க வேண்டும் என்கிறாள் அவள்...
என்னை உன்னால் தொட கூட முடியாது ஏன் nervous ஆக இருக்கிறாய் என்று அவன் கேட்க , அது தான் நான் nervous ஆக இருக்க காரணம் என்று அவள் சொல்லும் இடம் அழகு....அவளின் கையை பதற்ற முயன்று தோற்கிறான்....
ஒரு வேலை நீ என் கைகளை பிடித்தால் நான் எல்லாவற்றிலும் இருந்து விடுபடுவேன் என்கிறாள்...

அடுத்த நாள் எழும் டேவிட் அவளின் உடலை கடத்த திட்டம் போடுகிறான்...
ஆனால் அப்பொழுது அவளின் ஆக்ஸிஜன் குழாய் பறிக்க பட...இவன் செயற்கை சுவாசம் கொடுத்தும் அருகில் இருக்கும் எலிசபெத்தின் ஆவி மறைகிறது....
இவனை அடிக்க அனைவரும் பாயும் போது,எலிசபெத் கோமாவில் இருந்து விழிக்கிறாள்.....
ஆனால் மூன்றாம் பிறை ஸ்டைலில் இவன் யாரென்று கேட்க...
நொந்து போன டேவிட் திரும்புகிறான்...
அவளுக்காக இவன் apartment மொட்டை மாடியில் ஒரு தோட்டம் அமைக்க , அது அவளின் கனவில் வந்த தோட்டம்...அங்கே அவள் வருகிறாள் ,
உன்னை எனக்கு எப்படி தெரியும் என்று இவள் குழப்பத்தில் கேட்க...
உன் கனவுகளில் கூட இருக்கலாம்..என்ற சொல்லி அவள் கையில் அவன் சாவியை கொடுக்க....
அவள் அனைத்திலும் இருந்து விடுபடுகிறாள்....டேவிட் என்று அணைக்க.....
ஒரு நச் கிஸ் உடன் சுபம்....

நன்றி கார்த்தி....

Be Cool....
Stay Cool ....

2 comments:

நரேஷ் said...

எனக்கும் ரொம்ப பிடித்த படம்!!!

கடைசி கட்ட காட்சிகளில், நல்ல விறுவிறுப்பு இருந்தது (நடிப்பின் மூலம் மட்டுமே)...

thevanmayam said...

நான் படம்
பார்க்கவில்லை!!
உங்கள்
வர்ணனை அருமை!!

Blog Widget by LinkWithin