Monday, April 6, 2009

பதிவர் சந்திப்பு (5-4-09)

காலேஜ் இல் நடந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்புக்கு சில விசயங்களை organise பண்ணி விட்டு ,சரியாக முடிந்த பின் வேக வேகமாக SBI atm இல் பணம் எடுத்து , மினி statement பார்த்தால் முதல் அதிர்ச்சி நேற்று முன்தினம் ஆயிரம் ரூபாயை வேறொரு வங்கி atm இல் எடுக்க முயற்சித்து unable to process என்று வந்திருந்ததில்,ஆயிரம் ரூபாய் ஸ்வாகா என்று சொன்னது, வீட்டில் சொன்னதற்கு நன்றாக திட்டு வாங்கியதில் upset.

நேரே ஓபன் to மெரினா....

கொஞ்சம் கடல் காற்றுடன் ,நிறைய ஆர்வத்துடனும் பதிவர்களை எதிர்நோக்கி நின்றேன்....
என்னுடைய முதல் பதிவர் சந்திப்பு இது...
பல பதிவர்கள் அங்கே ஆஜர்.....
என்னுடைய மொக்கை வலைப்பூவையும் சிலர் ஞயாபகம் படுத்தி சொன்னது எனக்கு ஆச்சர்யம்....
பதிவர்களின் வாசிப்பானுபவம் அலாதியானது...

அனைத்து பதிவர்களையும் அதிஷா அடையாளம் காட்டினார்.....(Thanks to அதிஷா )

நான் அண்ணன் ராதாகிருஷ்ணன் அவர்களின் அருகில் அமர்ந்து பிறர் பேச்சை மட்டும் கவனித்தேன்....நானே வாயை திறந்து நான் முட்டாள் என்று நிரூபிப்பதை விட அவர்கள் வார்த்தைகளில் அனுபவங்களில் கவனம் செலுத்தினேன் பல விஷயங்கள் கிடைத்தது....

பிரஸ் id கார்டுடன் வந்திருந்தவர் பால பாரதி , அடுத்து கேபிள் ஷங்கர் ,லக்கி லுக்,நரசிம் ,ஊர் சுற்றி ,ராகவன் ,அக்னி பார்வை ,அகநாழிகை ,தண்டோரா,நட்டு போல்ட்டு ,ஜ்யோவ்ராம் சுந்தர் என்று பலரும் ஆஜர் ...

கார்க்கி வர அதிஷா மற்றும் கார்க்கி கூட்டு போட்டு நரசிம் அவர்களை கலாய்க்க...இடம் கல கலா ....

கார்க்கி வெகு நாட்களுக்கு முன்பு எனக்கிட்ட பின்னூட்டம் பற்றி சொல்ல அவரின் ஞாபக சக்திக்கு ஒரு ஓ......

நான் மெதுவாக விஜய் பற்றி ஓட்டலாமா என்று யோசித்துஅந்த எண்ணத்துக்கு தடா போட்டு உட்கார வைத்தேன்....

ஒரு புறம் கேபிள் ஷங்கர் and co வினர் சினிமா பேச்சில் மூழ்க,
இன்னொரு புறம் லக்கி and co அரசியலில் வளைந்து நுழைந்து சீரியஸ் விவாதங்களில் இருந்தனர்....சுதந்திர மென்பொருள் பதிவாளரின் பதிவு டுமீல்(அட அதாங்க சுட்டது) ஆனது ஹாட் topic....

நாம் மொக்கை பக்கம் கரை ஒதுங்கினோம்....

கும்மி பற்றி யாரோ காச்சி கொண்டு இருக்க நம் மறுப்பை அங்கே வெளியிடாமல் இங்கே சொல்லி கொள்கிறோம்....

புது இதழ் தொடங்குவது பற்றியும் பேசினார்கள்.....

blogspot இல் இருந்து டொமைன் மாற்றுவதில் உள்ள சாதக பாதகங்கள் அலசப்பட்டது...(உபயம் லக்கி)
அங்கு பேசிய போது வந்த ஒருவரை புது பதிவர் என்று எண்ணி கார்க்கி கேட்க்க அவர் நான் புதுசு blog என்றால் என்ன?என்று கேட்க கார்க்கி ஏதாவது சொல்லி அனுப்பி விடுவார் என்று பார்த்தேன் ஆனால் அவர் மெதுவாக அவருக்கு blog பற்றி விளக்கி சொல்ல அவரும் நானும் தொடங்குவேன் என்றார்...
கார்க்கியின் இந்த செயல் எனக்கு ஆச்சர்யம் தந்தது...keep it up கார்க்கி....

இவ்வாறாக போன சந்திப்பு லைட் ஹௌஸ் அருகே இருந்த டீ கடை டீ உடன் இனிதே முடிவடைய.....
இந்த புதிய பதிவர்களுக்கான சந்திப்பில் நான் கடைசி வரை அந்த புதிய பதிவரை யார் என்று பார்க்கவே இல்லை.....

பதிவர் சந்திப்பின் போது எடுக்க பட்ட புகை படங்கள் அண்ணன் அகநாழிகை பதிவில் இங்கே....(நன்றி அகநாழிகை அவர்கள்)

பதிவர் சந்திப்பு படங்கள்

இது தான் என் முதல் சந்திப்பு என்பதால் தெளிவாக சொல்ல முடியவில்லை என்று எண்ணுகிறேன் தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்....

Be Cool...
Stay Cool...

14 comments:

டக்ளஸ்....... said...

என்னைய விட நல்லாதான எழுதுறீங்கண்ணே,,
நம்ம பக்கமும் வந்து போங்க!

குடந்தைஅன்புமணி said...
This comment has been removed by the author.
குடந்தைஅன்புமணி said...

பதிவர் சந்திப்பு பற்றி நான் எழுதிய பதிவில் தவறவி்ட்ட விசயங்களையும் தாங்கள் பதிவு செய்திருக்கிறீர்கள். நன்றி நண்பா!

கார்க்கி said...

ரொம்ப நன்றி நண்பா...

T.V.Radhakrishnan said...

நன்கு எழுதியிருக்கிறீர்கள்...பாராட்டுகள்

லக்கிலுக் said...

நிகழ்வுகளை சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள்.

narsim said...

//லக்கிலுக் said...
நிகழ்வுகளை சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள்.
//

வாழ்த்துக்கள்

coolzkarthi said...

நன்றி டக்ளஸ்...

coolzkarthi said...

நன்றி குடந்தை அன்புமணி

coolzkarthi said...

வாங்க கார்க்கி...

coolzkarthi said...

வாங்க ராதாகிருஷ்ணன் அண்ணா...

coolzkarthi said...

வாங்க லக்கி....

coolzkarthi said...

வாங்க நரசிம்....

சத்தியமூர்த்தி said...

சாமி! எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்.

என்னோட வலைப்பக்கம் (வவவ.சத்தியமூர்த்தி.காம்) பற்றி யாராவது பேசினாங்களா?

இல்லேன்னா, நீங்க ஒரு நடை அக்கம்பக்கம் பார்த்து அந்த பக்கம் பாருங்க, அங்க போயி அறிமுகம் செய்யுங்க! (பிடிச்சிருந்தா). புதுப் பதிவு காலேஜுக்குக் கட்டடித்த போது, அல்லது, அம்மாவின் நம்பிக்கை படிச்சு பாருங்க.

Blog Widget by LinkWithin