Sunday, April 12, 2009

ஜீனியும் நானும்... (சிறுகதை)


வீட்டில் நான் தனியே இருக்கும் நேரங்களை நான் மிகவே ரசிப்பது உண்டு,மனதில் பல எண்ணங்கள் நம்மை பற்றி நமக்கே அடையாளம் கண்டுகொள்ள உதவும்,
சில சமயங்களில் டேய் பன்னாட நீ போக்கிரிடா என்றும் சில சமயங்களில் உத்தமபுத்திரனாகவும் பல சமயங்களில் வீழ்த்த முடியாத ஹீரோ ஆகவும் காட்டும்.
அன்றும் அப்படிதான் சிந்தனையினூடே, வீட்டில் இருந்து ஒரு அபயக்குரல்,சத்தியமாக கனவு இல்லை என்று மட்டும் தெரிகிறது,அந்த குரல் என் பேர் சொல்லி காப்பத்த சொல்ல,வீட்டில் யாரும் இல்லை என்ற நிதர்சனமான உண்மை மட்டும் தெரிந்தது,ஆனால் குரல் வந்த திக்கில் நான் கவனித்த போது,'கிட்டத்தட்ட சிலந்தி ஒன்று அந்த குளவியை நெருங்கி விட்டது தெரிந்தது',
ச்சே... இது என்ன இப்படியும் இருக்குமா என்று நான் திரும்ப நினைக்கும் போது,
"போகாதே என்னை இதனிடம் இருந்து காப்பாத்து, நான் உண்மையிலே வரம் தரும் ஜீனி " என்றது அந்த குரல் ,
"நான் எப்படி நம்புவது?"(நான் அறிவாளி இல்ல),
"முட்டாளே நான் பேசுவதில் இருந்தே தெரியவில்லை நான் something special என்று?"இது ஜீனி
முட்டாளே என்றதில் என் தன்மானம் சற்றே உசுப்ப பட்டாலும்,அந்த கவர்ச்சிகரமான வரம் என்னை ஈர்த்தது,மீண்டும் நான் அதனிடம்
"நீ something special என்றால் நீயே உன்னை காப்பாத்திகொள்ளலாமே" என்றேன்(மீண்டும் நான் அறிவாளி என்று prove பண்ண)
அது மரண வாயில் இருந்து" டேய் ***^#" என்று திட்டி விட்டு
"எனக்கு நானே பண்ண முடியாது என்பது தான் விதி" என்று மீண்டும் அபாய குரல் எழுப்பியது.
இந்த முறை உண்மையிலே இரண்டும் மோத தயாராக இருக்க,நான் ஜீனியை காப்பாற்றுவது என்று முடிவெடுத்தேன்,ஒரு அட்டையை எடுத்து குறி பார்த்து அந்த சிலந்தியை ஒரே அடியில் சட்னி ஆக்கினேன்,அந்த குளவியை கைகளில் ஏந்தினேன் ,
"என் மானசீக ஜீனியே வரம் தா" என்று சொல்லுமுன் ....அவர் ஒரு கொட்டு கொட்டி விட்டு பறந்து விட்டார்,சுரீர் என்று கையில் வலியுடன்,நடந்ததை நினைத்து கொண்டு இருந்தேன், நடந்தது என்ன கனவா என்று யோசிக்கும் பொது...மூளையில் சுரீர் என்று ஏதோ உரைக்க encyclopaedia வில் சிலந்திகள் பற்றி பார்த்தேன்,
அதில் சிலந்தியின் முக்கிய எதிரிகள் என்ற இடத்தில்....... red wasp (குளவி )

(இது play boy பத்திரிக்கையில் இருந்து சுஜாதா அவர்கள் எடுத்தது ,கதை வடிவம் என்னுடையது(க்கும்)...)
புரியாதவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்....


நன்றி கார்த்தி....

Be Cool...
Stay Cool... kulavi endru thiruttham

7 comments:

அன்புடன் அருணா said...

//இது play boy பத்திரிக்கையில் இருந்து சுஜாதா அவர்கள் எடுத்தது ,கதை வடிவம் என்னுடையது(க்கும்)...)//

இது வேறயாக்கும்????:))
அன்புடன் அருணா

தீப்பெட்டி said...

அப்போ ஜீனி சிலந்தியா?

//encyclopaedia வில் சிலந்திகள் பற்றி பார்த்தேன்,//

நல்லவேளை நானும் encyclopaedia-வ பார்த்தேன்

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

coolzkarthi said...

வாங்க அருணா ....

coolzkarthi said...

ஆமாம் தீப்பெட்டி ஜீனி எது என்று அறியாமல் சிலந்தியை கொன்று விடுகிறான்.....

coolzkarthi said...

வாங்க உலவு......

coolzkarthi said...

குளவி என்று திருத்தம் செய்த அறிவே தெய்வம் அவர்களுக்கு நன்றி....

Blog Widget by LinkWithin