வீட்டில் வளர்க்க சிறந்தது நாயா, பூனையா என்று சாலமன் பாப்பையா அவர்களை வைத்து ஒரு பட்டிமன்றம் கூட வைக்கலாம்,அது போல் மனிதனிடம் ஒன்றி போனவை நாயும் ,பூனையும்.ஆனால் எனக்கும் இவைகளுக்கும் என்றைக்குமே ஆனது கிடையாது.இவை மட்டும் அல்ல பல வளர்ப்பு பிராணிகளிடம் ,எனக்கு பயமா அல்லது அவைகளுக்கு என்னை கண்டு பயமா என்று தெரியாது ஏதாவது ஒரு விசயத்தில் அவைகளிடம் கடி வாங்கி விடுவது உண்டு.எனக்கு அப்பொழுது சிறு வயது(இப்பொழுது என்ன கிழவனா என்று கேட்காதிர்கள்)இருக்கும்,
வீட்டில் அவ்வபோது வந்து போய் பின்பு எங்கள் வீட்டு பூனையாக மாறிய எங்கள் புஸ்ஸி cat அன்று ஹாயாக படுத்து தூங்கி கொண்டு இருந்தது...நீங்களே சொல்லுங்களேன்,பூனை மேல் உட்கார்ந்து கொண்டு சின்ன பையன் நான்(அப்போ)சவாரி செய்ய நினைத்ததுஎன்ன பெரிய தப்பா?அது மரண பயத்தில் திரும்பி என் கால்களில் வவ் என்று ஒரு கடி கடித்து விட்டு ஓடிபோனது,அப்பொழுது இருந்து பூனைகளிடம் எனக்கு இருந்த உயர்ந்த மதிப்பு போய் விட்டது.அதே போல் நாய்.
தெரிந்தவர்கள் ஒருவர் பெரிய அல்சேசன் நாய் ஒன்றை வளர்த்து வந்தார்கள்,அவர்கள் வீட்டுக்கு போகும் போதெல்லாம் சரியாக என்னை பார்த்து ஒரு முறை முறைத்து குறைத்து விட்டு அதன் நேசத்தை காட்டும்,நானும் சளைக்காமல் போகும் போதெல்லாம் அதை தாஜா பண்ணுவதற்காக பிஸ்கட் ,பால்(ச்சே ச்சே லஞ்சம் இல்லை)எல்லாம் என் கையாலையே வைப்பேன்.ஒரு நாள் என் அம்மா அன்றைக்குத்தான் ஏதோ ஸ்பெஷல் mushroom பிரியாணி செய்ய வேண்டுமா,செய்தது பத்தாது என்று தெரிந்தவர்கள் அனைவரிடமும் போய் அதை கொடுக்க வேண்டும் (எனக்கும் mushroom பிரியாணி செய்ய தெரியும்?) என்று என்னை அனுப்பினார்கள் .சரியாக அந்த வீடு வந்தது வீட்டின் முன்பு நம் அல்சேசன் இல்லாததால் நானும் தைரியமாக போய் கதவை தட்டி விட்டு நின்றேன்.அவ்வளவு நேரம் எங்கு தான் இருந்ததோ தெரியவில்லை பாய்ந்து வந்து என் அழகிய கணுக்காலில் ஒரு கடி,பிரியாணி வேண்டும் என்றால் என்னிடம் கேட்டு இருக்கலாமே நான் அலறி கீழே போட்ட பிரியாணியை சுவைத்து விட்டு கடித்ததுக்கு ஒரு சாரி கூட கேட்காமல் போய் விட்டது.இவ்வாறு நானும் நாயும் கௌரவமாக பிரிந்து விட்டோம்.என்னை ஒரு சிறு அணில் கூட விட்டது இல்லை தேடி வந்து கடித்து விட்டு போய் உள்ளது. ஒவ்வொரு முறையும் பல ஊசி குத்தியும் சளைக்காமல் ஏதாவது ஒன்றிடம் குறைந்த பட்சம் சிறு கீரலாவது வாங்கி வருவேன்.பொறுங்கள் நான் சொல்வதை வைத்து வளர்ப்பு பிராணிகளே கூடாது என்று முடிவுக்கு வந்து விடாதிர்கள்,இதையும் படியுங்கள்.என்னை அவை எத்தனையோ பாடு படுத்தியிருக்கலாம்,ஆனால் இன்று நான் பலர் வீட்டில் நாய் மற்றும் பூனைகளை வளர்ப்பு பிராணிகளாய் பார்ப்பது இல்லை மகளும் மகனும் எங்கோ தொலைவில் வேலை பார்த்து வசிக்க,இவர்களின் தனிமையை அவைகளை தவிர வேறு யாராலும் இந்த அளவுக்கு போக்க முடியாது.சிறு வயதில் நாம் நாயை என்ன பாடு படுத்துவோமா அதை போலவே அதை கொஞ்சி மகிழ்ந்து அவர்கள் தங்கள் மகனை மகளை கொஞ்ச முடியாத முறையில் கூட அவைகளை கொஞ்சுவதை பார்த்து உள்ளேன்.அவைகள் அவர்களிடம் ஒரு முறை கூட கோபபட்டு , கோபித்து நான் பார்த்தது இல்லை கேவலம் அவை வளர்ப்பு பிராணிகள் தானே,ஒன்றும் மனிதர்கள் இல்லையே அம்மா அப்பாவிடம் கூட கோபபட கோபிக்க.என்ன வளர்ப்பு பிராணிகளை வளர்க்கலாமா வேண்டாமா?
நன்றி கார்த்தி....Be Cool...
Stay Cool...
No comments:
Post a Comment