சென்ற பதிவில் சேலத்து உணவுகளில் சிறிது மட்டுமே சொன்னேன் என்று பலர் கோபித்து கொண்டார்கள்(சும்மா, தோராயமா ரெண்டு பேர் இருக்கும்)
அதிகம் எழுதினால் போர் அடிக்கும் என்பதால் அவ்வாறு செய்தேன்,இதோ அதன் தொடர்ச்சி.....
சேலம் பற்றி சொல்லி விட்டு தட்டுவடை செட் பற்றி மட்டும் சொல்லாவிட்டால் , சேலம் என்னை மன்னிக்காது.....
ஆஹா தட்டுவடை செட்
(c) சேலம் தள்ளுவண்டி காரர்...
இது வேறு எங்கும் காண முடியாததொரு வஸ்து....
அட அட அடா...கேரட் ,பீட்ரூட் ,சிறிது பெரிய வெங்காயம் அனைத்தும் நன்கு செரவி,ஒவ்வொரு தட்டுவடையிலும் (சில இடங்களில் நிப்பட் என்பார்கள்)சிறிது கார சட்னி,புதினா சட்னி வைத்து ,இரண்டு தட்டுவடைகளின் நடுவே கேரட் and கோ வைத்து வாயில் வைத்தால்,நல்ல ருசி.....
இதன் பரிணாம வளர்ச்சி தான் நொறுவல் , செல்லமாக நொறுக்ஸ் ....
தக்காளி வைத்து கேரட் and கோ வைத்து ,தட்டுவடையை நன்றாக பொடித்து விட்டு,நில கடலை போட்டு ,சிறிது நல்லெண்ணெய் இட்டு சாப்பிட்டால்,அது சத்தான பாஸ்ட் food....
நொறுக்ஸ்.....
(c) ஆண்கள் உயர்நிலை பள்ளியின் எதிரே இருக்கும் தட்டுவடை காரர்...
நெல்லை லாலா ஸ்வீட்ஸ் இன் அல்வா,வாயில் வைத்ததும் உருகும்... ...இருட்டு கடை அல்வாவின் பிம்பம்,
தேர் முட்டி செல்பவர்...
ராஜ கணபதியை வணங்கி விட்டு நேரே வரும் இடம் இதுதான்....
அடுத்தது சிப்பி காளான் வைத்து ஒருவர் creative ஆக செய்யும் ஒருவித காளான் பாஸ்ட் food....இதுவும் நல்ல சுவையுடன் இருக்கும்
(c) மகளிர் உயர் நிலை பள்ளி முன்னால் விக்கும் தள்ளுவண்டிகாரர்....
கொள்ளு ரசம் அனைத்து இடங்களிலும் தெரிந்திருந்தாலும் இங்கு வித்தியாச சுவையுடன் இருக்கும்....காரணம் பச்சை கொள்(வேக வைக்காதது)....சளிக்கு நல்ல இதம் தரும்....
சென்ற முறை விட்டு போனது போவோண்டோ.....
ஒரு முறை நான் ,என் அப்பா மற்றும் சித்தப்பா மூவரும் வெளியே கோயம்பத்தூரில் என்று நினைக்கிறேன்...ஒரு ஓட்டலில் கொத்து பரோட்டா சாப்பிட்ட ஏககாலத்தில் ,திடும் என மாறி மாறி பார்த்துகொண்டோம்....
நேரே பரோட்டா மாஸ்டரிடம் சென்று நீங்கள் அம்மாபேட்டை தானே என்று கேட்டோம் அவருக்கு ஆச்சர்யம்..... கொத்து பரோட்டா சேலத்தின் மற்றுமொரு முத்திரை....டம்ளரை வைத்து கொத்தி எடுக்கும் ஓசையும் ,கொத்து பரோட்டாவின் மனமும்.....ஆஹா!
கொத்து பாரோட்டவுககென்றே தனியாக குருமா செய்வார்கள் என்றால் பாருங்கள்....
இவை அனைத்தையும் சாப்பிட்டு பழகி விட்ட நான் சென்னையில் படும் பாடு.....
பிற இடங்களில் பண்டிகை சமயங்களில் கூட்டம் ,மற்றும் அதிக கடைகள் இருக்கும் என்றால்,இங்கு?
என்னை போன்ற bachelors பாடு திண்டாட்டம் தான்,பொங்கலுக்கு ,ப்ராஜெக்ட் விசயமாக ஊருக்கு போகாததால்,நான்கு நாட்கள் எங்கள் ஏரியா வில் (ஆதம்பாக்கம் ,ngo colony)ஒரு டீ கடை கூட இல்லை,கொடுமை....
நான்கு நாட்க்களும் பிஸ்கட் மற்றும் பன் உண்டு வாழ்ந்தோம்....ஒரு நாள் ஒரு வேலை தான் சாப்பிடுவோம்...ஒரு சலிப்பு வந்து விடும்....
சென்ற இதழில்..ச்சே சென்ற போஸ்டில் ,
ஆம்பூரான் கடை போண்டா,சில்லி சிக்கன்(நான் சைவம் என்பதால் சொல்லவில்லை) இன்னும் சிலவற்றை சொன்னவர்களுக்கு நன்றிகள்....
உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.....
நன்றி கூல் கார்த்தி....
»
12 comments:
உங்களுடைய வருகைக்கும் பின்நோட்டதுக்கும் நன்றி
முடிஞ்ச தமிழிச்ல ஒரு வோட்டு போடுங்க , யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்
your view is so nice :-)
வாங்க சுரேஷ்.....
தட்டு வடை செட் = காந்தி ரோடு, ஈஸ்வரன் கொயில், நாராயண நகர் .....
தோசை கடை - செட்டியார் கடை - அருணாசல ஆசாரி தெரு
என் என் ஆர் - எசன்ஸ் தோசை - சித்தேஸ்வரா அருகில்
நரசுஸ் காபி
குகை பேக்கரி - காளான் பப்ஸ், சிக்கன் பப்ஸ்
அலங்கார் பேக்கரி = கேரட் அல்வா சூரமங்கலம்
ேட் கடை = மசாலா (பாம்பே) டீ
செல்வி மெஸ் தல கறி
அம்மாபேட்டை விட்டு வெளியே வாங்க சார்!!!
வாங்க கடைசி பக்கம்
பஜ்ஜி சாம்பார் செட் விட்டுட்டூங்க போல!
தட்டு வடை செட். பஜ்ஜி சாம்பார் செட், தயிர் வடை - சேலம் குகை
நான்கு ரோடு மாருதி ஹோட்டல் Full Meals பற்றி சொல்லாமல் விட்டதற்காக உங்கள் மேல் வழக்கு தொடரப்படும்.
:))))))
சனி, ஞாயிறுகளில் காலை பதினோரு மணி வாக்கில் அண்ணா நீச்சல் குளத்தில் நீந்தி விட்டு, கொலைபசியுடன் மாருதி ஹோட்டல் போய் மீல்ஸை கட்டுவது தனி சுகம். அதிலும் அந்த மீன்குழம்பை மறக்க முடியுமா?
சேலத்தில் படித்த அந்த நான்கு வருடங்களும் சொர்கம். (உணவிற்காக மட்டும் இல்லை. ஊர் அப்படி!)
ஞாபக படுத்தியதற்கு நன்றி நண்பர்களே.....
//
என் சொந்த ஊர் சேலம் என்று சொல்வதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்.....
//
ஆஹா.. நம்ம ஊர்ல இருந்து நம்மள மாதிரியே ஒருத்தன்..
தட்டுவடை செட்: நாராயண நகர் & பழைய பஸ் ஸ்டான்ட் சிந்தாமணி மார்க்கெட் பக்கம் அவரோட தம்பி.. சான்ஸே இல்லீங்க.. இப்படி ஞாபகபடுத்தி விட்டுட்டீங்களே.. :(
அதே போல அம்மாபேட்டையில இருந்துகிட்டு சிங்க மெத்தை எதிரில் ஜெயந்தி கூல்டிரிங்ஸில் கிடைக்கும் பால்கோவா ஐஸ்கிரீமை எப்படி மறந்தீங்க?
வெஜ்ஜா போயிட்டீங்க, இல்லைன்னா விவேகானந்தா, மங்களம் பத்தியெல்லாம் கலந்து கட்டி அடிச்சிருக்கலாம்..
ஊர் ஞாபகத்தை கிளப்பிட்டீங்க..
//
நாமக்கல் சிபி said...
தட்டு வடை செட். பஜ்ஜி சாம்பார் செட், தயிர் வடை - சேலம் குகை
//
அதானே..
அப்புறம்,சேலத்தில் உள்ள அசைவ ஓட்டல்கள் பற்றியும் சொல்லிவிட வேண்டும் அப்போதுதான் இந்த பதிவு முழுமை பெரும் ..நீங்கள் மறந்ததை நான் நியாபக படுத்து கிறேன் ... அசைவத்திற்கு பலாண்டு பெயர் பெற்ற சத்திரம் இறக்கம் பாம்பே சுந்தரவிலாஸ் ,(தற்போது கொடுமை ) கிச்சிபாளயம் முகமது புறா தெருவில் பாய் பிரியாணி கடைகள் , குகை காளியம்மன் கோவில் எதிரில் உள்ள தோசை கடைகறி குழம்பு , தியாகராஜா பாலிடெக்னிக் எதிரில் உள்ள கலியுகா ஓட்டல் ,ராகிகளியும் கருவாட்டு / கீரை குழம்பும் , கொண்டலாம்பட்டி குமார்கடை பிரியாணி , ஆட்டுக்கறி ,நாட்டுகோழி வறுவல் .ஜாகிரம்மபாளயம் கே .பி .என் பங்க் எதிரில் ச ந்தில் உள்ள தேவுது கடை அசைவ ஓட்டல் ஆட்டுக்கறி ,நாட்டுகோழி,மூளை பிறை ,பேமஸ் போட்டி வறுவல் .அப்புறம் செல்விமெஸ் ..ஸ்ஸ் ஆ ஆ படுகாரமான அசைவு உணவுகள் . பழைய பஸ்ஸ்டாண்டு சாந்தி தியேட்டர் எதிரில் உள்ள பேமஸ் மங்களம் கறி சோறு மற்றும் விவேகானந்தா தோசை ,கறி சோறு , spl குழம்பு , நான்கு ரோடு கடல் மீன் கடை மீன்குழம்பு சோறு , மீன் வறுவல் .பெரமனூர் மெய்ன் ரோடு உதயம் டிபன் கடை , காரிபட்டி அன்பு மெஸ் . புது பஸ் ஸ்டாண்டு ராஜகணபதி கறி சோறு கடை ...jangsan rahmaaniyaa பிரியாணி கடை . steel palaant ரோடு கொல்லல்பட்டி சோக்கு கடை பன்னிகறி ,ஆட்டுக்கறி ,நாட்டுகோழி ..ஐந்து ரோடு ம்ற்றும் 4 ரோடு .ட்டி.வி.எஸ் வெள்ளை பன்றிகடையின்.. குஷ்பு இட்லி பன்னிகறி வறுவல் . காம்பினேசன் ஆகா என்னருசி ... என்னருசி...
Post a Comment