என்று வசதியாய் நாவலின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து கொண்டு அந்த நாவலை எழுத தொடங்கினேன், உபயம் இரண்டு நாட்களுக்கு முன்பு விகடனிலோ அல்லது குமுதத்திலோ பிரசுரமான என் சிறுகதை தந்த தெம்பு....
எழுத்தாளன் ஆகலாம் என்று யோசித்த போது அது பெரிதான காரியமாக தோன்றவில்லை,சிறு சிறு பத்திரிக்கைகளுக்கு அனுப்பி சில வெளியிடப்பட்டும் சில வெளியே எறிய பட்டும் என்று என் எழுத்தாளன் கனவு வளர்ந்தோ சிதைந்தோ கொண்டிருந்தது....
இருந்து வரும் வருமானம் என் வயிற்றில் பாதியில் கால்வாசியை மட்டுமே நிரப்ப போதுமானதாக இருக்கும் என்பது பாவம் அதன் ஆசிரிய குழுவினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை....
இதுபோன்ற series of thoughts இல் மூழ்கி இருந்த போது அந்த குரல் கேட்டது....
என் வீட்டின் முன் அவள் நின்றிருந்தாள் ....
ஈனஸ்வரத்தில் அந்த பெண் ஏதோ ஒரு தாளை நீட்டினாள்,அது அவளை சுனாமியில் அடிபட்டவள் என்று அறிமுகம் கூறியது....
என் சட்டையின் பாக்கெட் உள் என் கை போனது...சட்டை சில்லறை இன்றி இளித்தது....
சிறு பத்திரிக்கையின் உபயத்தால் அன்று வந்திருந்த ஐந்து பத்து ரூபா நோட்டுகளில் ஒன்றை அவள் கைகளில் கிரக பிரவேசம் செய்து அனுப்பி வைத்தேன் ....அவள் தென்னாடா வடநாடா என்று எளிதில் அறிய முடியாத இடைப்பட்ட நிறத்தில் தென்னாட்டு சேலை அணிந்து இருந்தாள்.....,
அவள் அகன்ற பின் என்னுள் யோசனைகளின் பிரவாகம் ...
என் எழுத்துகளில் போதுமான அளவு நான் உணர்ச்சிகளை தூண்டவில்லை என்றால் அந்த படைப்பு குப்பைக்கு போகிறது ,
இதுபோன்று
அனைவரும் ஒரு வகையில் உணர்ச்சிகளின் பிடியில் இருக்கிறோம்,
நான் போதுமான அளவு பிறரின் அல்லது குறைந்த பட்சம் பத்திரிக்கை ஆசிரியரின் உணர்ச்சியை தூண்டும் அளவுக்கு எழுதினால் பத்திரிக்கையின் ஏதாவதொரு மூலையில் அந்த படைப்பு நாய் கொண்டு போட்ட வஸ்த்து போல் ஒதுங்கி இருக்கும்....
அவளின் பிழைப்போ அவளின் ஒப்பனைகளில்,பிறரிடம் மிச்சம் இருக்கும் கொஞ்ச நஞ்ச இரக்கத்தையும் ஐம்பது காசுகளிலோ அல்லது ஒரு ரூபாயோ என தொடங்கி அவர் அவரின் வசதிக்கு ஏற்ப அவர்களின் பரிதாபம் என்னும் உணர்ச்சியை (கவனிக்கவும் வசதிக்கு ஏற்ப மனதிற்கு ஏற்ப அல்ல.....)வாங்குவது....
அவர்களின் உணர்ச்சியை அல்லது பரிதாபத்தை அவள் சம்பாதித்தால் காசும் ,குறை இருந்தால் வசவும் மாறி மாறி வரும்....
அவள் மட்டும் அல்ல,
அரசியல்வாதி, இயக்குனர்கள்,பேச்சாளன்,செய்திகள் ,எழுத்தாளன்,என்று தொடங்கி விலைமகள் வரை உணர்ச்சியை கிளப்பும் படி இருந்தால் கவனம் பெறுகிறார்கள்/பெறுகிறது....
இந்த ஐந்து வருடங்களில் என் கதைகள் ஒரு நூற்று சொச்சம் பத்திரிக்கைகளில் வெளிவந்தது ,கொஞ்சம் வெளி உலகுக்கு அறிமுகமானேன் என்பதை தவிர சொல்லிக்கொள்ளும் படியான சாதனை ஏதும் பண்ணவில்லை....
அப்பொழுதுதான் அந்த செய்தி வந்தது,மும்பை குண்டுவெடிப்பில் பலர் பலியானதாக சொல்ல,மனம் வலித்தாலும் ,கை பேப்பர் மற்றும் பேனாவை எடுத்தது,மக்களின் உணர்ச்சியை தூண்ட போதுமானதாக இருந்த அந்த கட்டுரையை ஏதோ ஒரு பத்திரிக்கைக்கு அனுப்பினேன்....
இரண்டு வாரத்தில் மும்பை இயல்பு வாழ்க்கையில் திரும்ப,சென்னையில் ஒரு பத்திரிக்கையில் நான் அனுப்பிய அந்த குண்டு வெடிப்பு பற்றிய கட்டுரையை வெளியிட்டு கையில் ஒரு ஆயிரம் ரூபாயை தந்தார்கள்....
பேருந்தில் அன்று நான் பார்த்த அதே பெண் இன்றும் ஒரு தாளை நீட்டினாள்,அவள் மும்பை குண்டுவெடிப்பில் அடிபட்டவள் என்றது...
அன்று நடந்த உணர்ச்சி போராட்டங்களால் அவள் முகம் எனக்கு நன்று ஞாபகம் இருந்தது.....
அவள் ஏமாற்றுகிறாள் என்று தெரிந்தது....
நானும் கூட சுனாமி வந்த போது ஏதோ ஒரு சிறு பத்திரிக்கைக்கு அதன் கொடுமைகளை எழுதி அனுப்பி ஐந்நூறு பெற்றேன்,அவளும் தன் ஒப்பனைகளால் பெற்றாள்....
அவர்கள் கையில் திருவோடோ,அல்லது அதுபோன்ற எதுவோ என்றால் என் கையில் பேனா....இரண்டும் பணம் வாங்கத்தான் என்பதை மறுக்க முடியாது .....
இன்று நான் குண்டுவெடிப்பு பற்றி உணர்ச்சியை தூண்டும் விதமாக எழுதியதற்கு ஆயிரம் பெற்றேன்,இதோ அவளும் குண்டுவெடிப்பின் கொடுமையை ஒப்பனைகளில் காட்டி பணம் பெறுகிறாள்,
இதில் நான் எப்படி வந்தேன் என்று எனக்கு தெரியவில்லை,எனக்கும் அவளுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை,என்னருகே அவள் வந்தாள்,அவளின் பையை எதேச்சையாக பார்த்தேன்,அதில் பல பத்து ரூபாய் நோட்டுகளோடு ஒரு சில நூறு ரூபாய்களும் சிரித்தது ,நிச்சயம் ஆயிரம் ரூபாயை தாண்டும்,
அவளிடம் ஒரு ஐம்பது ரூபாயை கொடுத்து விட்டு,
"நீ ஒரு சிறந்த எழுத்தாளன்"
என்றேன்
சலனமே இன்றி என்னை பார்த்து விட்டு நகர்ந்தாள் கண்களில் ஒரு சின்ன மின்னலோடு,
பாவம் அவளை நான் புகழ்ந்தேன் என்று அவள் எண்ணி கொண்டாள் போலும்.....எழுத்தாளன் என்றால் புகழ்ச்சியா அல்லது வேறா என்று இதை படிக்கும் உங்களுக்கும் எனக்கும் மட்டுமே தெரியும் போது, பாவம் அவள் அதை புகழ்ச்சியாகவே எடுத்து கொள்ளட்டுமே.....
ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஸ்..... யாரிடமும் சொல்லாதிர்கள்.......
(இதில் வரும் பாத்திரங்கள் கற்பனை மட்டுமே,இது என் கருத்து மட்டுமே,தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்,ஆலோசனைகள் வழங்கவும்)நன்றி கார்த்தி.....
Be Cool...
Stay Cool...
15 comments:
attendance pottukkiren thala
வாங்க syed சார்.....அப்படியே எப்படி இந்த கதை? என்றும் சொல்லுங்கள்....
மொக்கை போட்டு விட்டதாக எண்ணுகிறேன்.....
வாங்க syed சார்.....அப்படியே எப்படி இந்த கதை? என்றும் சொல்லுங்கள்....
மொக்கை போட்டு விட்டதாக எண்ணுகிறேன்.....
அருமையான ஒப்பீடு கார்த்தி...
பிச்சைக்காரி Vs எழுத்தாளான்...
நீங்க எங்கயோ போயிட்டீங்க...
உங்கள் நடை நன்றாக இருந்தது.
இரு படங்களுக்கும் இடையே 6 வித்தியாசம் சிக்கிரம் கண்டுப்பிடித்து விடலாம் போல் கதையில் உள்ள இருவருக்கும் இடையே வித்தியாசம் கண்டுபிடிப்பது சிரமம்.
மிக்க நன்றி டக்ளஸ்....... அவர்களே.....
மிக்க நன்றி சந்துரு அவர்களே.....
நல்ல எழுத்து நடை!
கலக்குறீங்க...
என்னுடைய "டோக்கியோவில் ரஹ்மானை சந்தித்தேன்" பதிவை படித்துப் பார்த்து விட்டு கருத்து சொல்லுங்கள்.
ரொம்ப அழகா இருக்கு. தேர்ந்த எழுத்து நடை.
மிக்க நன்றி Joe அவர்களே.....
மிக்க நன்றி விக்னேஷ்வரி அவர்களே.....
தற்குறிப்பேற்ற அணி தங்களுக்கு நன்றாக வருகிறது
அழகிய நடை . அருமையான கதை
உங்களுக்குள் ஒரு ஜெயகாந்தன் ஒளிந்திரிகிறான் ...
சீக்கிரம் கண்டுபிடியுங்கள் ....
வாழ்த்துக்கள்
மிக்க நன்றி மந்திரன்....ஆனால் ஜெயகாந்தன் என்று சொல்லி என்னை புல்லரிக்க வைத்து விட்டீர்கள்.....அவர் எங்கே நான் எங்கே......
ஹே..கார்த்தி..சூப்பரா இருக்கு..வாழ்த்துக்கள்....எனக்கு இந்த பதிவு ரொம்ப பிடிச்சுருக்கு
வாங்க ராஜேஸ்வரி அக்கா....
Post a Comment