Friday, April 10, 2009

அமெரிக்க crisisக்கான தீர்வு.....


சமிபத்தில் என் மெயிலில் வந்தது.....

அமெரிக்காவில் உள்ள TIMES Newspaper அதன் பிசினஸ் பதிப்பு வாசகர்களிடையே,எப்படி இந்த crisis ஐ தீர்ப்பது?என்று கருத்து கேட்டுள்ளது ,அதற்கு ஒரு வாசகரின் பொட்டில் அறைந்தாற்போல் அமைந்த பதில் இது......

அதன் originality குறைய கூடாது என்பதற்காக ஆங்கிலத்தில்,

Dear Mr.President,
Patriotic retirement:
There are about 40 million people over 50 in the work force;
pay them $1 million a piece severance with stipulations:
1) They leave their jobs. Forty million job openings - Unemployment fixed.

2) They buy NEW American cars. Forty million cars ordered - Auto Industry fixed.

3) They either buy a house or pay off their mortgage- Housing Crisis fixed.


All this and it's still cheaper than the "bailout".


(இது என் மெயிலில் வந்தது மட்டுமே,என் சொந்த கருத்து அல்ல....)


இதை படிக்கும் போது நான் சிறு வயதில்(இப்போ கிழவன் இல்லைங்கோ )படித்த ஒரு கதை ஞாபகம் வருகிறது,

"The Man Who Saved Pumpelsdrop"

என்னும் அந்த கதையில் அனைவரும் ஏதோ ஒரு முழுமையில் இனி எதுவும் நமக்கு வேண்டாம் என்னும் முடிவில் இருப்பார்கள்,

இதனால் வியாபாரம் பாதிக்க பட்டு,கடைசியில் அவர்கள் தலையிலயே விடியும்....இதனால் ஒரு மந்தநிலை ஏற்பட்டு அனைத்து வியாபாரிகளும் கடையை மூடிவிட்டு கிளம்ப எத்தனிக்கும் போது,

அங்கு இருக்கும் ஒரு இரும்பு கடைக்கு ஒரு கோட் சூட் போட்ட மனிதன் வருகிறான், வந்தவன் பல இரும்பு உபகரணங்கள் ஆர்டர் செய்ய...அந்த இரும்பு வியாபாரி மலைத்து போகிறான் ,இவன் அந்த இரும்பு பொருட்கள் வாங்க பக்கத்து கடையில் போய் சிலவற்றை வாங்குகிறான்,


இப்படியாக ஒரு series of விற்பனை தொடங்க , இந்த நேரம் கிறிஸ்துமஸ் உம் வருகிறது,அனைவரும் பல பொருட்களை வாங்கி குவித்து கோலாகலமாக கொண்டாடி முடிக்க,அனைத்து கடைகளும் நல்ல லாபம் காண்கின்றன,


இந்த நேரத்தில் இரும்பு வியாபாரியிடம் இருவர் வந்து கேட்கிறார்கள்,


"எங்கள் மன நல காப்பகத்தில் இருந்து ஒருவன் தப்பி வந்து விட்டான் அவன் எப்பொழுதும் கோட் சூட் உடன் தான் இருப்பான்" என சொல்ல,

வியாபாரிக்கு விஷயம் புரிகிறது...


நடந்தவற்றை அவன் சொல்ல,அந்த காப்பகத்தார் அவனிடமே தங்கள் காப்பகத்துக்கு இரும்பு வேலி ஆர்டர் செய்து செல்கின்றனர்,இப்படியாக ஒரு நகரத்தையே காப்பாற்றிய பெருமை ஒரு பைத்திய காரனை சார்கிறது,


பார்ப்போம் இப்பொழுது இருக்கும் நிலையை எந்த பைத், சாரி யார் சரி செய்கிறார்கள் என்று...

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது ....


நன்றி கார்த்தி....


Be Cool...

Stay Cool...

2 comments:

சுபானு said...

:)

coolzkarthi said...

வாங்க சுபானு.....

Blog Widget by LinkWithin